செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




திங்கள், 15 ஆகஸ்ட், 2011

பிராணயாமம்..








உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
-திருமூலர்

பொதுவாக யோகத்தில் மூன்று விதமான மூச்சுகள் கூறப்படுகின்றன.
1. தோள்பட்டை சுவாசம்
2. மார்பு சுவாசம்
3. அடிவயிற்று சுவாசம்

நம் பிராணன் என்னும் உயிர்நிலை சக்தியிøனை வசப்படுத்தச் செய்யும் கலை இது. பிராணயாமத்தின் மூலம் தச வாயுக்களும் சீரடையும்.
பிராணயாமத்தின் நான்கு படிகள்
பூரகம்-மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்-மூச்சை உள் நிறுத்துதல்
ரேசகம்-மூச்சை வெளிவிடுதல்
சூன்யம்-மூச்சை வெளிவிட்ட பின் கும்பகத்தில் உள்நிறுத்துதல்

பிராணயாமத்தின் பலன்கள்
மனஅழுத்தம் நீங்குகிறது. உடல் அசதி மற்றம் மன சோர்வு நீங்கி சுறுசுறுப்பு மேலோங்குகிறது. உளவியல்ரீதியான பாதிப்பின்றும் 75% விழுக்காட்டிற்கு மேலாக முன்னேற்றம் ஏற்படும். ரத்தஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். மூளையில் ரத்தஓட்டம் மிகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும் நீங்கும். நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும், வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அளவுக்கதிகமான உடல் கொழுப்பைக் கரைத்து விடும். ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகரிக்கும். நம் வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி சீரண மண்டலத்தைச் சீராக்கும். குரல் வளம் மிகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். அலைபாயும் மனது ஒடுங்கி தன்னம்பிக்கை மிகும்.
உள்ளொளி பெருகும். (ஆன்மிக உணர்வு) மேலோங்கி மனஆற்றல் சிறக்கும்.

சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தனிமையில் அமைதியாக பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஓசோன் பரப்பினின்றும் (உயிர்க்காற்று) மிகுந்திருக்கும் வேளையில் செய்வது மிக நல்லது. வெறும் வயிற்றில் அல்லது அரை கப் சுத்தமான நீரை அருந்திப் பின் செய்ய வேண்டும். பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் யோகம், பிராணயாமம் செய்வதே நல்லது. இரவு விழித்திருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ பிராணயாமம் செய்யக்கூடாது. நம்முடைய ரத்த நாளங்கள் சுத்திகரிக்கப்பட்ட பின்பே பிராணயாமம் செய்ய வேண்டும். எனவே ஆசனம் செய்து ரத்த நாளங்களைச் சுத்திகரித்து விட்டுப் பின் பிராணயாமம் செய்வது நன்று.
(ஆசனத்திற்குப் பின் யோகம்)
காலை, மாலை குளித்த பின் செய்வது நல்லது. இல்லாவிடில் பிராணயாமம் செய்த பின் அரைமணி நேரம் கழித்தே குளிக்கவோ அல்லது சாப்பிடவோ வேண்டும்.ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தலை, கழுத்து, முதுகு தண்டு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். வாய், நாக்கு சுத்தமாக கழுவப்பட்டிருக்க வேண்டும். உடல் நலமற்ற நாட்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழல் காரணமின்றி இதர எல்லா நாட்களும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவால் மட்டுமே வெற்றி இலக்கினை அடைய முடியும்.
பிராணயாமத்தில் வகைகளில் சில
1. முக பஸ்த்திரிக வலிந்த உள் வெளிமூச்சு: கண்களை மூடிச் செய்ய வேண்டும். ஆசனத்தில் அமர்ந்து இருகைகளையும் மேலே தூக்கும் போது மூச்சை இழுத்து கீழிறக்கும் போது சத்தமாக வெளியிடவும். சிறிது சிறிதாக வேகமாக உள்மூச்சு, வெளிமூச்சு என்று ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 60 முறை செய்யலாம்.
பலன்கள் : நுரையீரலுக்கு அதிக பிராண வாயு செல்லும். மனஅழுத்தம் நீங்கும். கரியமில வாயு மற்றும் நச்சுப் பொருட்கள் பெருமளவு உடலை விட்டு நீங்கும். மூளையின் முன்புறத்தில் பெருமளவு இரத்தம் சென்று அப்பகுதியினை மிக மென்மையாக அதிர வைக்கும். மனநோய் நீங்கும். ஆண்மை பெருகும். நரம்பு மண்டலங்களும் நாளமில்லா சுரப்பிகளும் தூண்டப் பெறும். மற்றும் பல நன்மைகள் பெருகும்.
எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் இருதய நோய், ஹிஸ்டீரியா உள்ளவர்கள் இந்தப் பயிற்சியினைச் செய்யக்கூடாது. முதன் முறையாகச் செய்பவர்கள் பயிற்சி ஆசிரியரின் உதவியுடன் செய்தல் மிக முக்கியம்.
2. கபாலபதி: கண்களை மூடி வலது கையினை நாசிக முத்திரையில் வைத்து செய்ய வேண்டும். பெருவிரலால் வலது நாசியினை அடைத்து இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பிறகு வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். 1 நிமிடத்திற்கு 10 முதல் 60 வரை செய்யலாம். பின்பு மோதிர விரலால் இடது நாசியினை அடைத்து வலது நாசி வழியாக அதே போல் செய்ய வேண்டும்.
பலன்கள் : முக பஸ்த்திரிகாவின் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
3. சுகப்பூர்வ பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக முத்திரையில் வைத்து ஒரே நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து வெளி விடுவது மூச்சை முதலில் வெளிவிட்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் உள்மூச்சு, வெளிமூச்சு 1:1 என இருக்கலாம். மெதுவாக 1:2 என்ற நிலைக்கு மாறி விட வேண்டும். முதலில் இடது நாசியில் (சந்திர நாடி) முறையும் பின் வலது நாசியில் (சூரிய நாடி) முறையும் செய்து மெதுவாக எண்ணிக்கையினை உயர்த்தலாம்.
பலன்கள் : இரத்த அழுத்தம் இதயநோய், மனஅழுத்தம், சர்க்கரை நோய், முதுகுவலி, மூட்டு வலி, தூக்கமின்மை, சோம்பல், ஞாபக மறதி போன்ற பல நோய்கள் குணமாகும்.
4. நாடி சுத்தி பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக முத்திரையில் மூச்சினை வெளியிட்டு ஆரம்பிக்க வேண்டும். வலது நாசியினை அடைத்துக் கொண்டு இடது நாசியில் மூச்சினை உள்ளிழுத்து (பூரகம்) பின் இருநாசிகளையும் அடைத்துக் கொண்டு (கும்பகம்) வலது நாசி வழியே மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும் (ரேசகம்).
பிறகு அதே போல வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி இடது வழியாக வெளியிட வேண்டும்.

கால அளவு : ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தால் 1:1:1 என்று செய்து சில நாட்களில் 1:2:1 என்று நீட்டி பிறகு 1:4:2 என்ற அளவில் செய்யலாம்.
பலன்கள்: 72,000 நாடிகளும் (ட்யூபுலர் சேனல்ஸ்) சுத்தப்படுத்தப்படுகின்றன. நுரையீரலின் கொள்ளளவு மிகும். ஆஸ்துமா, ஈஸ்னோ பிலியாசைனஸ் மற்றும் பல நோய்களை வேரோடு அழிக்கலாம். நினைவாற்றல் பல மடங்கு பெருகும். அலைபாயும் மனது ஒடுங்கும். உடல் புத்துணர்ச்சி பெரும். உளவியல் ரீதியான பிரச்சனைகள், மனோ பயம் நீங்கும்.
எச்சரிக்கை : பயிற்சியாளரின் உதவியின்றி எந்த பிராணயாமப் பயிற்சிகளும் செய்யக்கூடாது. இதய நோயாளிகள் கும்பக நிலையில் மூச்சை உள்நிறுத்துதல் மிக குறைந்த அளவே இருக்க வேண்டும். அல்லது நோயின் தன்மைக்கேற்ப கும்பகம் செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல ரேசகம் குறைந்த மாத்திரையில் செய்ய வேண்டும்.

கோபத்தை இறைவன் ஏன் படைத்தான்?

வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தத்துவம் உதிர்க்கிறார் வியாசர்....







எப்போது ஒருவன் தனது மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தையும் தூக்கி எறிகிறானோ, அப்போது தான் ஞானம் உடையவனாகிறான்.

ஞானி என்பவன் தான் காணும் காட்சி அனைத்தையும் தெய்வகாட்சியாகவே காண்பான். நல்லது, கெட்டது, உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடுகள் அவனுக்கு இருப்பதில்லை.

எண்ணங்கள் ஆக்கவும், அழிக்கவும் வல்லவை. நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனை அடியோடு அழித்து விடுகின்றன.

சுக்கான் இல்லாத படகு இலக்கை அடைவதில்லை. அதுபோல, திசையில்லாத மனம் கடவுளை அறிந்து கொள்வதில்லை.

புலன்களின் ஆதிக்கத்தில் வாழும் வாழ்க்கை இவ்வுலகத்திற்கு சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதே ஆன்மிக வாழ்க்கை.

கடவுளுக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பக்கட்டம். ஞானம் முதிரும்போது பயம் அன்பாக மாறிவிடும். பூரண அன்பு என்பது பயத்தை முழுமையாக புறக்கணித்துவிடும்.

கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் ஒருவனின் மனம் தூய்மை அடைகிறது.

ஆணவமும், மோகமும் இல்லாதவர்கள், இன்பம், துன்பம் என்னும் இருநிலைகளைக் கடந்தவர்கள், ஆசைகளை அறவே ஒழித்தவர்கள், மெய்ஞானம் அடைந்தவர்கள் அழிவில்லாத ஆனந்தமாகிய கடவுளை அடைகிறார்கள்.

பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான். பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான்.

மகிழ்ச்சியில் தொடங்கி, மகிழ்ச்சியில் வசித்து, மகிழ்ச்சியில் அடங்கிப்போவதே உயர்ந்த வாழ்வாகும்.

ஒருவனுடைய மனதில் இருக்கும் விருப்பும், வெறுப்பு எண்ணங்களே சுகதுக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன.

உலகில் அனைத்து விஷயங்களும் தெரியும், தெரியாது என்ற இருவகைக்குள் அடங்கி விடும்.

செல்வத்தால் இன்பம் பெறுவதைக் காட்டிலும், துன்பத்தையே அதிகமாக்கிக் கொள்கிறோம். சிரிப்பவனை பணம் அழ வைத்துவிடும், அழுபவனை சிரிக்க வைத்து விடும்.

மனிதன் எதைக் கண்டாலும் உடனே அதை அடையத் துடிக்கிறான். அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் உண்டாகிறது. அந்த ஆசையே பாதி அவதிக்கு காரணமாகும்.

உலகில் மனிதன் ஒரு பங்கு இன்பத்தைப் பெறுவதற்காக ஒன்பது பங்கு துன்பத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறான்.

வெறும் மன உணர்ச்சிகளுக்கு ஆளாகி வாழும் மனிதன் மிருகங்களுக்குச் சமமானவன்.

உணர்ச்சிவயப்பட்டு கொந்தளிக்கும் குணம் கொண்டவர்களைத் துன்பம் நிழல் போலப் பற்றிக் கொள்ளும்.

வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி...







கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு'< என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்?' அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது,'' என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா
!

போதும் என்ற திருப்தி கிடைப்பது எப்போது? - விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்..





எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம்.


 பகவானும் கீதையில், ""எவன் தனக்காக மட்டும் 


ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ, 


அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனே தான் 


அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் 


பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள்,'' என்கிறார். 


அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், 


இதிலே தான் ஒருத்தரைப் பூரணமாகத் 


திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், 


நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு 


கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு 


மேல் தந்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். 




அன்னம் போடுகிற போது தான், ஒருத்தன் என்ன 


தான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு 


மேல் சாப்பிட முடியாது. 

நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து 


ரட்சிப்பதும் அன்னம் தான். அதனால் தான், "உண்டி 


கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்வர். 


மணிமேகலை என்னும் காப்பியம் இப்படி 


அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. 


மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சயபாத்திரம் 


கிடைத்து, அவள் அதை வைத்துக் கொண்டு சகல 


ஜனங்களின் பசிப்பிணியைப் போக்கினாள். 




இதற்கு அநேக யுகங்கள் முந்தியே சாக்ஷõத் 


அம்பாளும் இதே அன்னதானத்தை இங்கு 


பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, "இரு நாழி 


நெல் கொண்டு எண்நான்கு அறம் இயற்றினாள்' 


என்று சொல்லியிருக்கிறது. இங்கே அன்னபூரணிக்கு 


சந்நிதி இருக்கிறது. 

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

திருநீறு அணிவது ஏன்?





நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் 
உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. 
அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.




      விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்


1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.


2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.


3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி (அநாகதம்) தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சூட்சுமம் அங்கு உள்ளது.