செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




புதன், 29 ஜூன், 2011

ஆராதனைக்குரிய நமது ஆசார்ய புருஷர்கள் (முனிவர்கள்).

வேதவ்யாஸர் (கிருஷ்ணத்வைபாயணர்)

கிருஷ்ண பரமாத்மாவின் மற்றொரு அவதாரமான இவர் வஸிஷ்டரின் கொள்ளுப் பேரன் சக்தி முனிவரின் பேரன், பராசர முனிவரின் குமாரர் ஆவார். இவர் காற்றுவெளி மண்டலத்தில் ஒலிவடிவாய் இருந்த அனைத்து வேதங்களையும் புராணங்களையும் தன் தவ வலிமையால் கண்டு அவைகளுக்கு புத்துயிர் ஊட்டி அவைகளை (ரிக் 21, யஜுர் 101, சாமம், 1000, அதர்வணம் 9) என்று பிரித்தும் விரித்தும் (விரிவாயும்) வழங்கினார். அந்த க்ருஷ்ணத்வைபாயணரை நாம் தினமும் நமஸ்கரிக்க வேண்டும்.

ஆஸ்வலாயணர்

வ்யாஸர் வழங்கிய 21 கிளைகளை உடைய ரிக் வேதத்தில் தற்போது தென்னிந்தியாவில் ஒன்றும் வட இந்தியாவில் ஒன்றும் 2 கிளைகள் மட்டுமே உள்ளது. தென்னிந்தியாவில் சாகல சாகையும் வட இந்தியாவில் பாஷ்கள சாகையும் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள சாகல சாகை (ரிக்) க்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ அபர ப்ரயோகங்களை) வழங்கி ரிக் வேதிகளுக்கு அருளிய ஆசார்யர் ஆஸ்வலாயனரை நாம் தினசரி நமஸ்கரிக்க வேண்டும்.

போதாயனர்

வ்யாஸர் வழங்கிய யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேத சாகைகள் (89 சுக்ல யஜுர் 15 ஆக 101) அந்த 86 சாகைகளில் தற்போது நம்மிடம் உள்ளது தைத்தரீய சாகை என்ற ஒன்று மட்டுமே. அந்த க்ருஷ்ண யஜுர் வேத தைத்தரீய சாகைக்கு மட்டும் க்ருஹ்ய சூத்யம் (பூர்வ அபர) செய்த ஆசார்யர்கள் 6 பேர் அதில் முதன்மையானர்வர் போதாயனர் ஆவார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கணக்கு முறையை (மேதமேடிக் வேதிக்மேதமேடிக்) வழங்கியவரும் இவரேயாவார். ஆகவே அந்த ஆசார்யருக்கு நமஸ்காரம்.

ஆபஸ்தம்பர்

போதயனர் வழங்கிய பூர்வ அபர கர்மாக்களை நன்கு ஆய்வு செய்து சற்று சுருக்கமாகவும் எளிமையாகவும் மற்ற வேதத்தைச் சார்ந்தவர்களும் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படி தன் ஞானத்தையும் போதாயனரின் கருத்துக்களையும் இணைத்து ஒரு க்ருஹ்ய சூத்ரத்தை (ஆபஸ்தம்பம்) வழங்கினார். இன்று தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஏறத்தாழ 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கடைபிடிக்கும் சூத்ரம் ஆபஸ்தம்பர் செய்ததாகும். அந்த ஆசார்யர் ஆபஸ்தம்பருக்கு நமஸ்காரம்.

காத்யாயனர்

வ்யாஸர் வழங்கிய யஜுர் வேதம் 101 கிளைகளில் 15 கிளைகள் சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தது. குருகுலத்தில் பயிற்சி பெற்ற யாக்ஞவல்க்யர் சூழ்நிலை காரணமாக கற்ற வேதத்தை குருவிற்கே அற்பணித்துவிட்டு சூர்யனிடம் சுக்ல யஜுர்வேதத்தின் 15 கிளைகளையும் கற்று நமக்கு வழங்கினார். அதில் 1 கான்வ சாகை 2 மாத்யந்தின சாகை. அந்த 15 கிளைகளுக்கும் ஒரே க்ருஹ்ய சூத்ரம். அதைச் செய்தவர் காத்யாயனர். ஆகவே அந்த ஆசார்யர் காத்யாயனர் அவர்களுக்கு நமஸ்காரம்.

த்ராஹ்யாயனர் (காதிரர்)

வேதவ்யாஸர் வழங்கிய சாமவேதம் 1000 கிளைகளை உடையது. அதில் தற்போது 3 மட்டுமே உள்ளது. 1 ராணாயணீய சாகை, 2. கௌதும சாகை, 3. ஜைமினி சாகை. அதில் தென்னிந்தியாவில் அனேகமாக ரானாயணீய சாகை மட்டுமே உள்ளது. அந்த ராணாயணீய சாகைக்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ அபர ப்ரயோகம்) செய்து அருளியவர் த்ராஹ்யாயனர் ஆவார். அவருக்கு மற்றொரு பெயர் காதிரர் (காதிர க்ருஹ்ய சூத்ரம்). ஆகவே அந்த ஆசார்யர் த்ராஹ்யாயணர் அவர்களுக்கு நமஸ்காரம்.

கௌசிகர்

வ்யாஸர் வழங்கிய அதர்வன வேதம் 9 கிளைகளை உடையது. அதில் 2 கிளைகள் மட்டுமே தற்போது உள்ளது. (ஆயுர்வேதம், மந்திர சாஸ்திரங்கள் மிகவும் தெளிவாக அமைந்துள்ளது.) ஒன்று கௌனக சாகை, மற்றொன்று பிப்பலாத (பைபிலாத) சாகை. இதில் சார்ந்தவர்கள். அவர்களில் சௌனக சாகையைச் சேர்ந்தவர்களே அதிகம். அந்த சௌனக சாகைக்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ, அபர ப்ரயோகம்) செய்து அருளிய ஆசார்யர் கௌசிகர் ஆவார். அந்த கௌசிகருக்கு நமஸ்காரம்.

ஆண்டப்பிள்ளையார்

எல்லா வேதத்தைச் சார்ந்தவர்களும் அக்னி ஹோத்ரம், பசுபந்தம், ஸோமயாகம், கருட சயனம், வாஜ பேயம், அப்தோர் யாமம், உக்த்யம், ஷோடசீ போன்ற யாகங்களை அனுஷ்டிக்க அந்தந்த ஆசார்யர்கள் ப்ரயோகங்களை வகுத்திருந்த போதிலும் அதிகமாக தற்போது நடைமுறையில் அனுஷ்டிக்கப்படுவது ஆண்டப்பிள்ளையார் வகுத்த வழிமுறைகளையே சார்ந்துள்ளது. ஆகவே அந்த சிரௌத ஆசார்யர் ஆண்டப்பிள்ளையார் அவர்களுக்கு நம்ஸ்காரம்.










வாழ்க வளமுடன்

க .செந்தில் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக